உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்மிக பேச்சு போட்டி: மாணவர்கள் பங்கேற்பு

ஆன்மிக பேச்சு போட்டி: மாணவர்கள் பங்கேற்பு

உடுமலை;உடுமலை ஆன்மிக பேரவையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான பேச்சு, பாட்டுப்போட்டி நடந்தது.உடுமலை மாரியம்மன் கோவில் வளாகத்தில், ஆன்மிக பேரவை சார்பில் பேச்சு, பாட்டுப்போட்டிகள் நடந்தது. கோவில் அறங்காவலர் ஸ்ரீதர் போட்டிகளை துவக்கி வைத்தார்.இதில், 6, 7, 8 வகுப்புகள் ஒரு பிரிவாகவும், ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடந்தது. பேச்சுபோட்டி, 'அதிபத்த நாயனார்', 'திருநாவுக்கரசு நாயனார்' என்ற தலைப்புகளிலும், பாட்டுப்போட்டி தேவாரப்பாடல்கள் தலைப்பிலும் நடந்தது.திருவாவடுதுறை ஆதின மைய பேராசிரியர் ஜெய்சிங்லிங்கவாசகம் தலைமை வகித்தார். உடுமலை சுற்றுப்பகுதி பல்வேறு பள்ளிகளைச்சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.போட்டிகளை, ஆன்மிக பேரவை தலைவர் கலாவதி ஒருங்கிணைத்து நடத்தினார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவின் போது, பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை