உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் ரோட்டில் திடீர் பள்ளம்? வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து

திருப்பூர் ரோட்டில் திடீர் பள்ளம்? வாகனங்கள் அடுத்தடுத்து விபத்து

பல்லடம், : பல்லடம், திருப்பூர் ரோட்டில் உருவான திடீர் பள்ளத்தால், வாகனங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகின.அப்பகுதியினர் கூறுகையில், 'பல்லடம் - திருப்பூர் ரோட்டில், பனியன் கம்பெனி வாகனங்கள், அரசு தனியார் பஸ்கள், ஆம்புலன்ஸ்கள், டூவீலர்கள் என, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த ரோட்டில், குன்னாங்கல்பாளையம் பிரிவு அருகே, நேற்று திடீரென பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் இந்த பள்ளம் தோண்டப்பட்டதாகவும், இதற்காக, நெடுஞ்சாலைத் துறையில் அனுமதியும் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.வழக்கமாக இந்த ரோட்டில் வந்து செல்பவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரியாது. இவ்வழியாக சென்ற வேன், ஆட்டோ, டூவீலர் உள்ளிட்ட பல வாகனங்கள் பள்ளத்தில் சிக்கி விபத்துக்குள்ளாகின.அனுமதி பெறாமல் தோண்டப்படும் இது போன்ற பள்ளத்தால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி