உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி பழனியப்பா பள்ளியில் தமிழ்ப் பண்பாட்டு கலை விழா

அவிநாசி பழனியப்பா பள்ளியில் தமிழ்ப் பண்பாட்டு கலை விழா

அவிநாசி:பொங்கலை முன்னிட்டு, அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் தமிழ்ப் பண்பாட்டு கலை விழா நிகழ்ச்சிகள் நடந்தன.தாளாளர் ராஜ்குமார் துவக்கி வைத்தார். செயலாளர் மாதேஸ்வரி, எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை உறுப்பினர்கள் அபிநயா பிரகாஷ், நிவேதா சதீஷ்குமார் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.வனம் இந்தியா பவுண்டேஷன் செயலாளர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். அவிநாசி ரோட்டரி அறக்கட்டளை தலைவர் பூபதி, கொங்கு அறக்கட்டளை தலைவர் பொன்னுக்குட்டி, மெட்ரோ பாலிடன் கிளப் தலைவர் சக்திவேல், திருப்பூர் ரைடிங் கிளப் சேர்மன் சின்னச்சாமி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.சூரியனுக்கு பொங்கல் படைத்தல், மாட்டுப் பொங்கல், கோ பூஜை, பாரம்பரிய இசை நிகழ்ச்சிகளான நையாண்டி மேளம், பம்பை, உறுமி, கரகாட்டம், பரதநாட்டியம், ஒயிலாட்டம் மற்றும் கொங்கு பண்பாட்டு மையத்தின் ஆதன் பொன் செந்தில்குமார் தலைமையில் பழனியப்பா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பெருஞ்சலங்கை ஆட்டம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கும்மியாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை