உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / டூ - வீலர் பூட்டை உடைத்த பைனான்ஸ் ஊழியர் கைது

டூ - வீலர் பூட்டை உடைத்த பைனான்ஸ் ஊழியர் கைது

லால்குடி:திருச்சி மாவட்டம், லால்குடி அருகே இடையாற்றுமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சக்திகுமார். இவர் வேங்கக்குடியில் வி.ஏ.ஓ.,வாக பணியாற்றுகிறார். இவர் கடந்த ஆண்டு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று, 'பல்சர்' பைக் வாங்கினார். கடைசி, இரு தவணைகளை கட்டவில்லை என கூறப்படுகிறது. இரு தவணை தொகை மற்றும் அதற்கான வட்டி என, 36,000 ரூபாய் செலுத்த, பைனான்ஸ் நிறுவனத்தினர் நெருக்கடி கொடுத்து வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் சக்திகுமார், டோல்கேட் அருகே பைக்கை நிறுத்தி சென்றார். பின்தொடர்ந்து வந்த பைனான்ஸ் ஊழியர், அந்த வாகனத்தின் 'லாக்கை' உடைத்து எடுத்துச் சென்றார். இதுகுறித்து கொள்ளிடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கை எடுத்துச் சென்றவர்கள், பஜாஜ் நிறுவன ஊழியர்கள் என்பது தெரிந்தது.இதையடுத்து பைக்கை எடுத்துச் சென்றவர்களில் ஒருவரான சகாயராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரான கும்பகோணம் சூர்யாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை