மேலும் செய்திகள்
அங்கன்வாடி ஊழியர் மறியல்: 98 பேர் கைது
10-Dec-2025
வேலுார்:வேலுார் மாவட்டம் பொன்னை அடுத்த எஸ்.கண்டிகையில் சாலையோரம் நேற்று ஆண் சடலம் கிடந்தது. பொன்னை போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்ததில் இறந்து கிடந்தவர், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த மாங்காமுத்து மோட்டூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஹரிசிவன், 29, என்பதும், அவருக்கு மனைவி, 1 வயதில் பெண் குழந்தை உள்ளதும் தெரிந்தது.ஹரிசிவன் பலியானதை அறிந்த அவரது உறவினர்கள், சம்பவ இடம் சென்று பார்த்தபோது, உடலில் காயங்கள் இருந்ததையும், கையில் மின்சாரம் பாய்ச்சி கைகள் கருகிய நிலையில் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து உறவினர்கள், 'ஹரிசிவனை யாரோ அடித்து கொலை செய்து வீசி சென்றுள்ளனர். அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறி, பொன்னை - சோளிங்கர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மறியலை கைவிட செய்தனர்.
10-Dec-2025