மேலும் செய்திகள்
அரசு ஊழியர் வீட்டில் 15 சவரன் நகை திருட்டு
02-Oct-2025
போதை மாத்திரை வழக்கில் 4 பேர் சிக்கினர்
02-Oct-2025
வேலுார்: ''காட்பாடியில் கட்டப்பட்டு வரும், புதிய அரசு மருத்துவமனை, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற பரிந்துரைக்கப்படும்,'' என, சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., கூறினார்.தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டு குழு தலைவரும், கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அன்பழகன் தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழு, நேற்று வேலுார் மாவட்டத்தில் வளர்ச்சிப்பணிகளை ஆய்வு செய்தது. அதன்பின், வேலுாரில் நிருபர்களிடம் அன்பழகன் கூறியதாவது:காட்பாடியில் கட்டப்படும், மூன்றடுக்கு புதிய அரசு மருத்துவமனையில், 60 படுக்கைகள் தான் உள்ளன. இதை மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற, மேலும், மூன்றடுக்கு கட்டடம் கட்ட அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இது, சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் போன்ற அனைத்து வசதிகளும் கொண்டதாக இந்த மருத்துவமனையை அமைக்க பரிந்துரைப்போம். இதனால், இப்பகுதி மக்கள் பயனடைவார்கள். அத்துடன் கோவிந்தம்பாடி தடுப்பணையை கட்டி முடித்தால், சுற்றுவட்டார அனைத்து கிராம விவசாயிகளும், இதன் மூலம் பயனடைவார்கள். அப்பணிகளும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
02-Oct-2025
02-Oct-2025