மேலும் செய்திகள்
கார் வாங்கி தராத தந்தையை கொன்ற மகனுக்கு காப்பு
19-Dec-2025
தீயில் எரிந்து ஏ.டி.எம்., இயந்திரம் நாசம்
16-Dec-2025
அஞ்சல் கண்காட்சியில் டி.வி.ஆர்., தபால் தலை
14-Dec-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இதில், பெரும்பாலான வார்டுகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். அவர்களது ஓட்டுகளை பெறுவதற்காக, 'இண்டியா' கூட்டணியின் கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதி, காங்., வேட்பாளர் கோபிநாத்திற்கு ஆதரவாக, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த, 2 ஜமாத் கமிட்டி நிர்வாகிகளிடம், கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., ஓட்டு சேகரித்து பேசுகையில், ''சிறுபான்மையினருக்கு ஆதரவாக என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் துணை நிற்பார். அதனால் தான், தமிழகத்தில் ஜாதி, மத பேதமற்ற திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. இதை விரிவுபடுத்தத்தான், 'இண்டியா' கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் போட்டியிடும் நம் கூட்டணி வேட்பாளர் கோபிநாத்திற்கு கை சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,'' என்றார்.பதிலளித்து பேசிய ஜமாத் கமிட்டி நிர்வாகிகள், 'கிருஷ்ணகிரி நகர அஹ்லே சுன்னத்துல் ஜமாத் கமிட்டியில் உள்ள, 6 மஸ்ஜித் மற்றும் அஹ்ல சுன்னத் வல் ஜமாத் பூரா மஸ்ஜித் உள்பட, 10 மஸ்ஜித்கள், 'இண்டியா' கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்' என்றனர். தொடர்ந்து கிருஷ்ணகிரி பழையபேட்டை, பெங்களூரு சாலை, காந்திசாலை உள்ளிட்ட பகுதிகளில், காங்., வேட்பாளருக்கு ஆதரவாக மதியழகன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார்.கிருஷ்ணகிரி, தி.மு.க., மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், தேர்தல் பொறுப்பாளர் இளங்கோவன், நகர செயலாளர் நவாப், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் உள்ளிட்ட, தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.
19-Dec-2025
16-Dec-2025
14-Dec-2025