உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காரியமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

காரியமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்டம்

செஞ்சி: வல்லம் ஒன்றியம் காரியமங்கலம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல துணை ஆட்சியர் வளர்மதி வரவேற்றார். ஒன்றிய துணை சேர்மன் மலர்விழி அண்ணாதுரை, பி.டி.ஓ.க்கள் உதயகுமார், இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மஸ்தான் பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.இதில் தாசில்தார் ஏழுமலை, மாவட்ட கவுன்சிலர் அன்பு செழியன், ஒன்றிய கவுன்சிலர்கள் பத்மநாபன், இந்துமதி, கோமதி, ஊராட்சி தலைவர் சரளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ