| ADDED : ஆக 10, 2024 05:29 AM
செஞ்சி: செஞ்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கருணாநிதி கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் விழா செஞ்சியில் நடந்தது.ஒன்றிய அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சீத்தாலட்சுமி வரவேற்றார்.அமைச்சர் மஸ்தான், 5.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 161 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான உத்தரவுகளை வழங்கி பேசுகையில், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டில் குடிசைகளே இல்லாமல் செய்ய வேண்டும் என்ற அவரது கனவை நினைவாக்கும் வகையில் 161 பயனாளிகளுக்கு கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.சாலையோரங்களில் வாழ்ந்தவர்களுக்கு மாடி வீடு கட்டி தந்தவர். தீப்பிடிக்காத வீடுகளையும், தொகுப்பு வீடுகளையும் கட்டிக் கொடுத்தார். அவர் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் ஸ்டாலின் வீடு கட்டுவதற்கான நிதியை 2 மடங்காக உயர்த்தி வழங்கியுள்ளார். 3 ஆண்டுகளில் செஞ்சி, மேல்மலையனுார் தாலுகாவில் 7500 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது' என்றார்.நிகழ்ச்சியில் தாசில்தார் ஏழுமலை, பி.டி.ஓ., முல்லை, துணைச் சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், மேலாளர் பழனி மற்றும் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.