உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் 

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் 

மயிலம், : மயிலம் அடுத்த விநாயக புரம் அரசு துவக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தங்கினார். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் வெண்ணிலா, துணைத் தலைவர் கலா முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் பரிசுத்தராஜன், ஜெயராஜ் பிரபு வரவேற்றனர்.சிறப்பு விருந்தினர் செண்டியம்பாக்கம் பள்ளி தலைமையாசிரியர் அருள்மொழி வர்மன், மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார்.தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழுவினர். பள்ளி வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்