உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி, 50; இவரது மனைவி வினோதினி. கோபிக்கு, வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் வினோதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.இந்நிலையில், கடந்த 20ம் தேதி கோபி, தனது மகன் கஜபதியை திட்டிய போது, தட்டிக்கேட்ட வினோதினியை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து வினோதினி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து கோபியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை