விழுப்புரம் : மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் காணும் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடந்தது.காணும் பொங்கலையொட்டி, நேற்று முன்தினம் கீழ்புத்துப்பட்டு பகுதிகளில் கோலப்போட்டி, கயிறு இழுத்தல், இசை நாற்காலி, ஓட்டப்பந்தயம், ஓவியம் வரைதல், லெமன் அண்ட் ஸ்பூன் ஓட்டம், ஸ்லோ பைக் ரேஸ் மற்றும் உறியடித்தல் போட்டிகள் நடந்தன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பொம்மி பேஷன் காலாப்பட்டு, வனித்தா ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி கீழ்புத்துப்பட்டு, மதர் கூலிங் சிஸ்டம் புதுச்சேரி, செல்வா டெக்ஸ்டைல் காலாப்பட்டு, பிரியதர்ஷினி ட்ரேடர்ஸ், கொடி மெடிக்கல் நிறுவனங்கள் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.விழாவில் பூபாலன், முருகவேல், விஜயகுமார், குமரவேல் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.பா.ஜ., மாவட்ட செயலாளர் மணிவண்ணன், கீழ்புத்துப்பட்டு வார்டு உறுப்பினர் விஜயகுமார், முருகன், மணிவண்ணன், சக்திவேல், துரைவேல், விக்னேஷ், வெங்கடேசன், ரவிக்குமார், புருஷோத்தமன், அன்பரசன், அரவிந்தன், தமிழ்ச்செல்வன், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.