உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆறு பேர் மீது வழக்கு

ஆறு பேர் மீது வழக்கு

சிவகாசி: சிவகாசி அருகே செவலுாரில் திருட்டுத்தனமாக மணல் அள்ளியதாக சப் சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் மூன்று டிராக்டர்கள் ஒரு மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தார்.இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து சப் கலெக்டர் அலுவலகம் முன்பு, பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க கோரி சிவகாசி அருகே கோவலன்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.மேலும் அதே பகுதியைச் சேர்ந்த கரிக்கோல் முருகன், சவுந்தர், செந்தாமரைப்பாண்டி, பரமேஸ்வரன், வடபட்டி முத்து மணிகண்டன் ஆகியோர் சப் கலெக்டர் அலுவலகம் முன்பு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு பேர் மீதும் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை