உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்லுாரி ஆண்டு விழா

கல்லுாரி ஆண்டு விழா

சிவகாசி: சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லுாரியில் 15 வது ஆண்டு விழா நடந்தது.பேராசிரியர் ராஜசேகரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். காளீஸ்வரி கல்லுாரி முதல்வர் பாலமுருகன் பேசினார். சாதனை படைத்த கல்லுாரி மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.2017 -- 19 கல்வியாண்டில் பல்கலைக்கழகத் தேர்வில் கல்லுாரியில் முதல், இரண்டாம் மதிப்பெண் பெற்ற முன்னாள் மாணவர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் கற்பகம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை