உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்த முதியவர்கள்

ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்த முதியவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: தென்காசி தனி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபை தொகுதியில் பல்வேறு ஓட்டு சாவடிகளில் முதியவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வத்திராயிருப்பு நெடுங்குளம் அண்ணா நகரில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.இத்தொகுதியில் உள்ள 283 பூத்துகளில் சுமார் 10 பூத்துகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடம் வரை வாக்கு பதிவு தாமதம் ஏற்பட்டது. பின்னர் தேர்தல் பிரிவு அதிகாரிகள் புதிய இயந்திரத்தை பொருத்தி வாக்குப்பதிவை தொடரச் செய்தனர்.வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் ஒவ்வொரு பூத்திலும் குறைந்த பட்சம் 10 முதல் அதிகபட்சம் 200 பேர் வரை வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தது. இவர்கள் ஓட்டளிக்க முடியாமல் தவித்தனர்.கொடிக்குளம் பேரூராட்சி நெடுங்குளம் அண்ணா நகரில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் வகையில் அங்கு ரோடு, வருகால், சுகாதார வளாகம் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து அப்பகுதி மக்கள் ஓட்டுப்பதிவை புறக்கணித்தனர். மதியம் 12 மணி வரை ஒரு ஓட்டு கூட பதிவு செய்யாததால் தேர்தல் பிரிவு அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி மக்களை ஓட்டளிக்க செய்தனர்.கான்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொதுமக்கள் ஓட்டுளிக்கும் போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதானதால் ஓட்டுப்பதிவு சுமார் 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரிகள் பழுதினை சரி செய்ததை எடுத்து மக்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை