உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம்

சிவகாசி: சிவகாசியில் உள்ள உழவர் சந்தையை முழுமையாக பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை மீட்டுருவாக்க விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அசோகன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கவுன்சிலர் ராஜேஷ், விருதுநகர் வேளாண்மை துணை இயக்குனர் முருகப்பன், சிவகாசி வேளாண்மை உதவி இயக்குனர் சுந்தரவள்ளி, முத்தையா, கிருஷ்ணசாமி, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் ராஜி, குணசீலி, வேளாண்மை அலுவலர்கள் சுமதி, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். உழவர் சந்தைக்கு விளை பொருட்களை கொண்டு வருவதற்கு போக்குவரத்து வசதி, குடிநீர், கழிப்பறை வசதி வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை