உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கொட்டப்பட்டு வரும் குப்பை; அரிக்கப்படும் சர்வீஸ் ரோடு

கொட்டப்பட்டு வரும் குப்பை; அரிக்கப்படும் சர்வீஸ் ரோடு

விருதுநகர் : விருதுநகரில் குப்பை பாயின்டால் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரங்கள் அரிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு அருகே திறந்தநிலை வடிகால் அருகே குப்பை கொட்டப்படுவதால் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரம் அரிக்கப்பட்டு மெல்ல மெல்ல சேதம் அடைந்து வருகிறது. மாவட்டத்தின் நான்கு வழிச்சாலை ஓரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்ட காலம் போய், குப்பை பாயின்டுகள் பெருகி உள்ள காலமாகி விட்டது. இதனால் எங்கும், எதிலும் மாசு பரவி உள்ளது. மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரானது வடிகாலுக்கு செல்ல விடாமல் இது போன்ற குப்பை பாயின்டுகள் தடுத்து விடுகின்றன. குப்பையிலே நீர் தேங்கி சகதியும், சுகாதாரக் கேடுமாய் உள்ளது. தற்போது புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு அருகே சர்வீஸ் ரோடு அரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பை பாயின்டை அகற்றி சர்வீஸ் ரோட்டை பலப்படுத்தி அரிப்பை தடுக்க வேண்டும். இல்லையெனில் இது சேதத்திற்கு வழிவகுக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை