உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நரிக்குடியில் நகை பணம் கொள்ளை

நரிக்குடியில் நகை பணம் கொள்ளை

நரிக்குடி : நரிக்குடி இலுப்பைகுளத்தைச் சேர்ந்த முத்துக்குமார் 34. கட்டட காண்ட்ராக்டர். நேற்று முன் தினம் காலை இவர் கட்டட வேலைக்கும், மனைவி கார்த்தீஸ்வரி விவசாய வேலைக்கும் சென்றனர். இந்நிலையில் பட்ட பகலில் மர்ம நபர்கள் வீட்டு கதவை உடைத்து, வீட்டிற்குள் இருந்த பீரோ சாவியை எடுத்து, திறந்து 9 1/4 பவுன் நகை, ரூ. 1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.டி.எஸ்.பி., ஜெகநாதன் பார்வையிட்டார். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை