உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

பட்டாசு பறிமுதல்: நான்கு பேர் கைதுசாத்துார்: சாத்துார் அன்பின் நகரத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன் இவரது தோட்டத்தில் வைத்து பேன்சி ரக பட்டாசுகளை உற்பத்தி செய்துள்ளார். ரோந்து சென்ற போலீசார் திடீர் சோதனை செய்தபோது அன்பின் நகரத்தை சேர்ந்த சேம் 33, ராஜ்குமார் 22, ஜோசப் 19 ஆகியோர் பேன்சி பட்டாசுகள் தயார் செய்வது தெரிய வந்தது. பட்டாசு, மூலப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.தொழிலாளி பலிசத்திரப்பட்டி: சத்திரப்பட்டி அருகே தொம்பக் குளத்தை சேர்ந்தவர் ஞானவேல் 41, கட்டட தொழிலாளி. திருமணம் ஆகி 10 வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக ரொம்ப குளம் சாய்பாபா கோயிலில் தங்கி கோயில் பணிகளை செய்து கொண்டு கிடைத்த கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ரோட்டோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். கீழ ராஜகுலராமன் போலீசார் விசாரிக்கின்றனர்.தற்கொலைசிவகாசி: சிவகாசி சேனையாபுரம் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் 40. மீட்டர் பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இவர் மதுவுடன் விஷம் கலந்து குடித்து மயங்கினார். மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் விபத்தில் பலிகாரியாபட்டி: மல்லாங்கிணரைச் சேர்ந்தவர் கருப்பசாமி 37, பஸ் மெக்கானிக்காக வேலை பார்த்தார். நேற்று முன் தினம் இரவு 8:00 மணிக்கு வேலை முடிந்து டூவீலரில் வீடு திரும்பும் போது (ஹெல்மெட் அணியவில்லை) கல்குறிச்சி சமத்துவபுரம் அருகே ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை