உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரமண வித்யாலயா விளையாட்டு விழா

ரமண வித்யாலயா விளையாட்டு விழா

ராஜபாளையம், : ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 21வது ஆண்டு விளையாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.தாளாளர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். ஆலோசகர் டாக்டர் கு.கணேசன் முன்னிலை வகித்தார். இந்திய ரயில்வே விளையாட்டு பயிற்சியாளர் அண்ணாவி கேற்று ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி தொடக்கினார்.மாணவர்களின் பல்வேறு விளையாட்டு போட்டிகள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. யமுனா அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.ஏரோபிக்ஸ், பிரமிட், ஜிம்னாஸ்டிக், மல்லர் கம்பம் என பல்வேறு விளையாட்டு கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் நிகழ்த்தி காட்டினர். ஏற்பாடுகளை முதல்வர் சுதா, உடற்கல்வி இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் நிர்வாகி ராமராஜ் தலைமையில் உடற்கல்வி ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை