உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அடமானம் விடுவிக்க சிறப்பு முகாம்

அடமானம் விடுவிக்க சிறப்பு முகாம்

விருதுநகர் : கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களில் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் நீண்ட ஆண்டுகளுக்கு முன் பெற்ற கடன்களில் முடிவு கட்டப்பட்ட பின்னரும், அடமானம் விடுவிக்கப்படாமல் உள்ள கடன்களுக்குரிய உறுப்பினர்களது சொத்துக்களின் வில்லங்கங்கள் விடுவிப்பது தொடர்பாக முகாம் நடத்தப்பட உள்ளது.இந்த முகாம் ஜூலை 4, 5 ஆகிய இரு நாட்களில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் நடக்கிறது.எனவே சங்க உறுப்பினர்கள் முகாம் நடக்கும் தினத்தில் சங்கத்தை அணுகி முடிவு கட்டப்பட்ட கடன்களுக்குரிய ஆவணங்களை அளித்து தங்களது சொத்தின் பேரிலான அடமான கடன்களில் உள்ள சொத்தை பத்திரப் பதிவு அலுவலகத்தில் உள்ள சங்கத்தின் பெயரிலான வில்லங்கத்தை நீக்கி பயனடையலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை