உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 400 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

400 ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஒரே பகுதியில் ஊராட்சி செயலாளர்களாக தொடர்ந்து 20 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிந்த 400 ஊராட்சி செயலாளர்களை வேறு பகுதிகளுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் வருவாய் குறைவான ஊராட்சிகளில் பணியாற்றியவர்கள் அதிக வருவாய் வரும் ஊராட்சிகளுக்கும் அதிக வருவாய் வரும் ஊராட்சிகளில் பணியாற்றியவர்கள் குறைவான வருவாய் வரும் ஊராட்சிகளுக்கும் பணியிட மாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இவர்களுக்குள் பணிபுரியும் பகுதிகளை மாற்றி பணியிடங்கள் கொடுப்பதால் அரசிற்கான வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், சிலர் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிவதால் முறைகேடு புகார்கள் வந்ததாலும் ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை