உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குளம் போல் நிரம்பிய லீக் குடிநீர்

குளம் போல் நிரம்பிய லீக் குடிநீர்

விருதுநகர் : விருதுநகரில் பஞ்சாயத்து யூனியன் காலனி அருகே குழாய் உடைந்து லீக் ஆன குடிநீர் குளம் போல் நிரம்பி வீணாகி வருவதால் மக்கள் வேதனை யடைந்துள்ளனர்.தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்னும் ஏப்ரல், அக்னிநட்சத்திரம் துவங்கவில்லை. மக்களுக்கு தாகம், இருமுறை குளிப்பதற்காக அதிகளவில் குடிநீரை பயன்படுத்த வேண்டி உள்ளது.இந்நிலையில் இதே சூழலில் தான் பல இடங்களில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதால் அழுத்தம் காரணமாக உடைவது வாடிக்கையாக உள்ளது. உடைவதை எவ்வளவு சீக்கிரத்தில் சரி செய்கின்றனர் என்பது பல நேரங்களில் கேள்விக்குறியாக தான் உள்ளது. இந்த பிரச்னை சாத்துார், ராஜபாளையம், விருதுநகர், அருப்புக்கோட்டை, திருத்தங்கல் என எல்லா பகுதிகளிலும் பரவலாக உள்ளது.விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனியில் மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. இது அருகில் உள்ள காலிநிலங்களில் தேங்கி வந்தது. தற்போது இது குளம் போல் பெருகி உள்ளது. குடிநீர் பழுது ஏற்பட்டால் அதை உள்ளாட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டுமா அல்லது குடிநீர் வடிகால் வாரியம் சரி செய்ய வேண்டுமா என்ற குழப்பம் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இவர்களை கேட்டால் அவர்கள் என்றும், அவர்களை கேட்டால் இவர்கள் என்றும் பாகுபாடு செய்கின்றனர். இதனால் தீர்வு காணப்படாமல் பல இடங்களில் பம்பிங் செய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் கோடை நேர குடிநீர் பஞ்சத்தை தவிர்க்க குடிநீர் உடைப்பு, லீக் ஆகியவற்றை உடனுக்குடன் சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை