மேலும் செய்திகள்
போலீஸ் செய்தி
1 minute ago
ஆட்டோ தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
1 minutes ago
வாளி தண்ணீரில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
4 hour(s) ago
பெட்ரோல் குண்டு வீச்சு: 5 பேர் கைது
4 hour(s) ago
விருதுநகர்: விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் நடக்கும் வளர்ச்சி பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் திட்டத்தில் ரூ.30.55 கோடியில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு செய்தார். இதில் கட்டுமான பிரிவு முதன்மை நிர்வாக அதிகாரி சுசில்குமார் மவுரியா, முதன்மை பொறியாளர் சஞ்சய் பிரசாத் சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உள்பட பலர் பங்கேற்றனர். மேலும் தோரண நுழைவு வாயில், சுற்றுச்சுவர், வெளிவளாக மேம்பாடு, கூரையுடன் கூடிய டூவீலர், கார்கள் காப்பகம், ரயில் நிலையத்தின் கட்டட முகப்பு மேம்பாடு, ரயில் இயக்க துணை சேவை அலுவலகங்கள் இடமாற்றம், ஒருங்கிணைந்த விசாரணை மையம் அமைக்கும் பணிகள், பயணிகள் காத்திருப்பு பகுதி மேம்பாடு, மின் துாக்கி வசதியுடன் கூடிய ஆறுமீட்டர் அகல நடை மேம்பாலப்பணிகள், கூரை நீட்டிப்பு பணிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். இவற்றின் பணிகளில் 94 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இப்பணிகள் அனைத்தும் நிதியாண்டின் இறுதியில் நிறைவடைந்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
1 minute ago
1 minutes ago
4 hour(s) ago
4 hour(s) ago