உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாவட்ட கேரம் போட்டி

மாவட்ட கேரம் போட்டி

சிவகாசி: சிவகாசி அருகே சுக்கிரவார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 வது மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் இரு நாட்கள் நடந்தது. இதில் 32 பள்ளிகளைச் சேர்ந்த 644 மாணவர்கள் பங்கேற்றனர். 8, 10, 12, 14 , 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 16 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டது. அதிக புள்ளிகள் பெற்று சுக்கிரவார்பட்டி உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் , மாணவிகள் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். திருத்தங்கல் ரோட்டரி கிளப், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி ஸ்பார்களர், இன்னர் வீல் கிளப் நிர்வாகிகள் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்