உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர்.நகரில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று (ஜன.,24) திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் தடைமட்டமாகின. இந்த விபத்தில் ஆலையில் வேலை செய்துவந்த 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்; 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்ட தீயணைப்பு துறையினர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பட்டாசு தயாரிக்கும்போது வெடிமருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ