மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் உள்ள பேச்சியம்மன், காட்டழகர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களிடம் வனத்துறை சேவை கட்டணம் வசூலிப்பதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கூலி தொழிலாளர்களும், விவசாய தொழிலாளர்களும் அதிகமுள்ள விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை யடிவார பகுதிகளான தேவதானம் சாஸ்தா கோயில், ராஜபாளையம் அய்யனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பேச்சியம்மன், காட்டழகர் கோயில், வத்திராயிருப்பில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்களும், அதனை ஒட்டி உள்ள நீர்வரத்து ஓடைகளுமே ஆன்மிக சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.பல ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லாமல் இத்தகைய கோயில்களுக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் சுதந்திரமாக பயணித்து வந்தனர். மலையடிவார விவசாயிகளும் எவ்வித சிரமமின்றி தங்களது விவசாய பணிகளை செய்து வந்தனர்.ஆனால், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு வனத்தை பாதுகாக்கிறோம் என்ற நோக்கத்தில் இத்தகைய மலையடிவார கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் கோயிலுக்கு வரும் பக்தர்களிடமும், மலையடிவார விவசாயிகளிடமும் சேவை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில் ஆண்டாள் கோவில் சார்பில் நுழைவு கட்டணமும், வனத்துறை சார்பில் சேவை கட்டணமும் வசூலிக்கப்பட்டதால் ஒரே இடத்திற்கு செல்ல 2 கட்டணங்களை செலுத்தும் நிலைக்கு பக்தர்கள் ஆளாகினர். இதனால் ஏழை எளிய பக்தர்கள் பேச்சியம்மனை தரிசிக்க ஒவ்வொருவரும் ரூ 40 கொடுக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இது பக்தர்களிடம் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.அ.தி.மு.க., ஆட்சியின் போது எவ்வித கட்டணங்கள் வசூலிக்கபடாத நிலையில் தற்போதைய தி.மு.க., ஆட்சியில் இரண்டு அரசுத்துறைகளும் கட்டணம் வசூலிப்பது மக்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.பல லட்சம் பக்தர்கள் வரும் சபரிமலையில் கூட எவ்வித கட்டணத்தையும் கோயில் நிர்வாகமோ, வனத்துறையோ வசூலிக்கவில்லை. ஆனால், எந்தவித அடிப்படை வசதியும், பாதுகாப்பு வசதியும் செய்து தராத நிலையில் அறநிலைத்துறையும் வனத்துறையும் போட்டி போட்டு கட்டணம் வசூலித்தது விருதுநகர் மாவட்ட மக்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.செண்பகத் தோப்பில் சேவை கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டுமென ஹிந்து அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில்,தற்போது பேச்சியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள நீர்வரத்து ஓடைக்கு முன்பே பாலத்தில் செக்போஸ்ட் போல் கம்பி வைத்து மறித்து, அங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் சிரமத்திற்கு பக்தர்கள் ஆளாகியுள்ளனர்.இதனால் கோயிலுக்கு வருபவர்கள் சேவை கட்டணம் கொடுத்தும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே வாகனங்களை நிறுத்திவிட்டு, நடந்து செல்லும் சூழலை வனத்துறை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்தில் ஆளாகி வருகின்றனர்.வனத்தை பாதுகாக்க வனத்துறை எத்தகைய கட்டுப்பாடுகளை விதித்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என கூறும் பக்தர்கள் சேவை கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago