உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பள்ளி முன் தேங்கும் மழைநீர் பரிதவிப்பில் மாணவர்கள்

பள்ளி முன் தேங்கும் மழைநீர் பரிதவிப்பில் மாணவர்கள்

விருதுநகர்: விருதுநகர் ஆமத்துார் துவக்கப்பள்ளி முன் மழைநீர் தேங்குவதால் பாதிப்பு ஏற்படுகிறது.விருதுநகர் ஆமத்துார் துவக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை. இது பாதையாக இருப்பதால் இவ்வழியை வாகன ஓட்டிகள் கடக்கின்றனர். இதனால் மாணவர்கள் கவனம் சிதறுகின்றனர்.அதே நேரம் பள்ளி முன் பேவர் பிளாக் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி மாணவர்களை சிரமப்படுத்துகிறது.விருதுநகரில் நேற்று நள்ளிரவு பெய்த மழை காரணமாக மழைநீர் தேங்கியது.இதனால் மாணவர்கள் வெளியில் தேங்கிய நீரை மிதித்து நடந்து செல்லும் நிலை உள்ளது. ஆகவேஊராட்சி நிர்வாகம் பள்ளிக்கு சுற்றுச்சுவர், மழைநீர் தேங்கா வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை