உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமிக்கும் கருவேலம்; ஆழப்படுத்துவது அவசியம்

சிறுகுளம் கண்மாயை ஆக்கிரமிக்கும் கருவேலம்; ஆழப்படுத்துவது அவசியம்

விருதுநகர் : விருதுநகர் மீசலுார் சிறுகுளம் கண்மாயை கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வருவதால் நீர் நிரம்பியும் பயன்படாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. விவசாய பூமியான இப்பகுதியை காக்க கண்மாயை ஆழப்படுத்துவது அவசியமாகி உள்ளது.விருதுநகர் அருகே மீசலுாரில் சிறுகுளம், பெருங்குளம் கண்மாய்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. இதில் சிறுகுளம் கண்மாய் இந்தாண்டு பெய்துள்ள கனமழையால் நிரம்பி உள்ளது. இந்த கண்மாயில் அடிக்கடி துார்வாரும் பணிகள், மராமத்து பணிகள் நடந்தாலும் கருவேலம் மர தொல்லை விட்டபாடில்லை.மீசலுாரை சுற்றிலும் காய்கறிகள் விவசாயம், மானாவாரி விவசாயம் அதிகளவில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த கண்மாய்களின் நீர் பாசனம் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில் கருவேலமர ஆக்கிரமிப்பு மீண்டும் துவங்கி விட்டதால் அதை முளையிலே கிள்ளிய எறிய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதே போல் கண்மாய்க்குள்ளும் குப்பை கழிவுகள் தேங்கி கிடக்கின்றன.மேலும் கண்மாயை ஆழப்படுத்துவதும் மிக அவசியமாக உள்ளது. தற்போது நீர் உள்ளதால் பணி செய்ய முடியாது என்றாலும், இந்த கண்மாயை ஆழப்படுத்தினால் பெரிய நீர்நிலையாக அப்பகுதி மக்களுக்கு உதவும். ஆகவே மாவட்ட நிர்வாகம் சிறுகுளம் கண்மாயில் கருவேல மரத்தை அகற்றி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை