உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமுல் நிறுவன பால் வந்தாலும் பாதிப்பில்லை என்கிறது ஆவின்

அமுல் நிறுவன பால் வந்தாலும் பாதிப்பில்லை என்கிறது ஆவின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில், குஜராத் மாநில அமுல் நிறுவனத்தின் பால் விற்பனைக்கு வந்தாலும், ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என, ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.தமிழகத்தில் ஆவின் நிறுவனத்திற்கு போட்டியாக, பால் விற்பனையை துவங்குவதற்கு, குஜராத் மாநிலத்தின் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் திட்டமிட்டு உள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஆவின் பால் விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தி நமது நாளிதழில் நேற்று வெளியானது.இதையடுத்து, ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: பால் மற்றும் பால் பொருட்களை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உரிய தரத்தில் தயாரித்து, குறைவான விலையில் ஆவின் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், சில நிறுவனங்கள் தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன.மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஆவின் வாயிலாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், உயரிய தரத்தில் பால் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் பால் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஆவின் நிறுவனம் தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம், தர்மபுரி, துாத்துக்குடி, கரூர் மாவட்டங்களில், புதிய பால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதிகரித்து வரும் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், எளிய முறையில், புதிதாக பால் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பால் வினியோகம் எளிதாகவும், துரிதமாகவும் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பச்சையப்பன் கோபால் புரம்
மே 09, 2024 13:15

ஆக ஆக ஆஹா!! குசராத்தி சேட்டுக குசராத்திலே கொள்ளையடிச்சது பத்தாதுன்ட்டு தங்க தமிழ் நாட்டுக்கு கொள்ளையடிக்க வந்தா எங்க ? அமலாக்க துறைக்கே பயப்படாதவர் அமுலைக் கண்டு பயப்படுவாரா!! எப்படியும் தண்ணிலதான் பாலைக் கலக்கப் போரார். அவ்வளுதான் பால்ல கலப்படம் பண்ணிட்டான்னு இழுத்து சாத்திப் புடுவார் . யாரு கிட்ட?


hari
மே 09, 2024 14:46

பாலுக்கு பதில் பீர் குடுத்த உனக்கு ஓகேவா கோபாலபுரமே.....கொத்தடிமையே


Siva
மே 09, 2024 13:09

இதுவும் திராவிட மாடல்??? இருக்கும் மாடு இல்லாமல் பால் கிடைக்கும் வழி எங்கள் முதல்வருக்குத் தெரியும்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 09, 2024 09:38

ஆமாம் பாதிப்பு இருக்காதுதான் அதான் ஆவினை எப்படியும் மூடிவிடுவார்களே அப்புறம் எப்படி பாதிப்பு வரும்?


chennai sivakumar
மே 09, 2024 09:15

பூனை கண்ணை மூடிக் கொண்ட கதை நினைவுக்கு வருகிறது


Duruvesan
மே 09, 2024 07:49

விடியல் நீ பிரீ ஆ குடு, சேல்ஸ் பிச்சிக்கும்


duruvasar
மே 09, 2024 07:39

ஆவினை மூடுவதற்க்காக அமர்த்தப்பட்டுள்ள அதிகார வர்க்கம் அதன் வேலையை அப்பழுக்கற்று செய்யும் என உறுதியாக நம்பலாம்


Kasimani Baskaran
மே 09, 2024 07:13

விற்கும் பொருளிலும், வழங்கும் சேவையிலும் தரமில்லை என்றால் சந்தை வசப்படாது என்பது திராவிடர்களுக்கு தெரியாது போல பத்து ரூபாய் தொழில் நுணுக்கமெல்லாம் குடிமக்களிடம் வேலை செய்யுமே தவிர சந்தையில் ஒரு பொழுதும் வேலை செய்யாது


Guru Rajan
மே 09, 2024 07:13

பாலுக்கே பால் ஊற்றும் மனோ தங்கராஜ் வாழ்க


2020capital holdings
மே 09, 2024 07:13

அமுல் வந்தால் மக்களுக்கு நல்லது தான்


குமரி குருவி
மே 09, 2024 07:12

மதுவுக்கு எதிராக பல போதை வஸ்துக்கள் அமோக விற்பனை நடந்தாலும் மதுவிற்பனை குறையவில்லை அது போல் ஆவின் பாலும்... என நினைப்பது விடியலின் மெத்தனம்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ