உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு திட்டத்தில் முறைகேடு 24 அதிகாரிகள் மீது வழக்கு

வீடு திட்டத்தில் முறைகேடு 24 அதிகாரிகள் மீது வழக்கு

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டமான, 'ஆவாஸ் யோஜனா'வில், பயனாளிகள் தேர்வில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, ஜவ்வாதுமலை யூனியன்களில், 2017 - 18ல் மோசடி நடந்ததாக, அப்போதைய ஆரணி தொகுதி காங்., -- எம்.பி., விஷ்ணுபிரசாத், ஊழல் மற்றும் முறைகேடு புகார்களை விசாரிக்கும் லோக் ஆயுக்தாவில், 2020ல் புகார் அளித்தார்.விரிவாக விசாரிக்க, திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு, லோக் ஆயுக்தா பரிந்துரை செய்தது. இதையடுத்து, டி.எஸ்.பி., வேல்முருகன் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியது.இதில், பி.டி.ஓ.,க்கள் வந்தவாசி குப்புசாமி, தெள்ளார் பரணிதரன், ஆரணி சீனுவாசன், உதவி பி.‍‍டி.ஓ.,க்கள், உதவி பொறியாளர்கள், ஓவர்சியர்கள், பஞ்., செயலர்கள் என, 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீதான குற்றங்கள் விசாரிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை