மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
4 hour(s) ago | 4
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
15 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
15 hour(s) ago
சென்னை: மதுக்கடைகளில் அதிக பணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில், பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது. டாஸ்மாக் கடைகளில், பாட்டிலுக்கு 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் வசூலிப்போரை பணிநீக்கம் செய்யுமாறும், 10 ரூபாய்க்கு குறைவாக வசூலிப்பவரிடம் அபராதம் வசூலிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக நடந்த சோதனையில், 28 கடைகளில், 10 - 30 ரூபாய் வரையும்; 31 கடைகளில், 10 ரூபாய்க்கு குறைவாகவும் வசூலிக்கப்பட்டது தெரியவந்தது. ஒரு கடையில், 21 லட்சம் ரூபாய், மற்றொரு கடையில், 4.50 லட்சம் ரூபாய், ஒரு கடையில், 2.50 லட்சம் ரூபாய் பணம் குறைவாக இருப்பதும் கண்டறியப்பட்டது.பணம் குறைவாக இருந்த கடைகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பத்து ரூபாய்க்கு மேல் விற்கப்பட்ட கடைகளில், விற்பனையாளர்கள் மட்டும் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதேபோல, 10 ரூபாய்க்கு குறைவாக விற்ற கடைகளில் விற்பனையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:ஒரு கடையில் நடக்கும் தவறுக்கு மேற்பார்வையாளர் தான் முழு பொறுப்பு. கடையில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால், அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விதி. ஆனால், மாவட்ட மேலாளர்களுடன் நல்ல தொடர்பில் இருப்பதால், மேற்பார்வையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, பாரபட்சம் இல்லாமல் தவறு செய்வோர் மீது மேலாளர்கள் நடவடிக்கை எடுப்பதை, டாஸ்மாக் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
4 hour(s) ago | 4
15 hour(s) ago | 1
15 hour(s) ago