உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நடிகர் விஜய் கருத்தால் பா.ஜ., வளரும் அண்ணாமலை பேட்டி

நடிகர் விஜய் கருத்தால் பா.ஜ., வளரும் அண்ணாமலை பேட்டி

திருச்சி:திருச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அளித்த பேட்டி:இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் அத்துமீறல் அதிகம் இருக்கும். இந்தியாவில் நடைபெறும் 90 சதவீதம் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியினர் தான் வெற்றி பெறுகின்றனர்.விக்கிரவாண்டியில், தெருவுக்கு ஒரு அமைச்சர் என முகாமிட்டு, இலவசங்கள் அளிக்கின்றனர்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், 'ஏ டீம்' தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தான், 'பி டீம்' அ.தி.மு.க., ஒதுங்கி இருப்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது.தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பா.ம.க.,வுக்கும் நீட் தேர்வு தொடர்பான மாற்றுக்கருத்து உள்ளது. இது தான் ஆரோக்கியமான அரசியல். 2016 முதல் தேர்ச்சி விகிதம் மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற ஆதாரத்தின் அடிப்படையில், நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். நீட் தேர்வு நடத்துவதற்கு முன், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை பெற்றவர்களின் புள்ளி விபரங்கள், நீட் தேர்வுக்கு பின், புள்ளி விபரங்களை பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பிரச்னைக்கு தீர்வு கிடைத்து விடும். ஆனால், அதை செய்யவில்லை.நடிகர் விஜய், நீட் தேர்வை எதிர்க்கிறார். அவர், தி.மு.க., சார்ந்த கொள்கைகளை எடுத்து செயல்படும்போது, தமிழகத்தில் பா.ஜ.,வுக்கான ஓட்டும், ஆதரவும் பெருகத்தான் செய்யும்.தமிழக அரசை பொறுத்தவரை, புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு என்ற பெயரில், முட்டாள்தனமான விவாதத்தை முன் வைத்துள்ளனர். ஹிந்தி திணிப்பு என்று சொல்லும் தி.மு.க., அரசு, உருது பள்ளிகளை அதிகம் துவக்க வேண்டும், என்று ஊக்கப்படுத்துகிறது.அ.தி.மு.க.,வின் அழிவுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் போன்ற பலர் காரணமாக உள்ளனர். அண்ணாமலை வெளியேறி விட்டால், அ.தி.மு.க., இழந்த இடத்தை பிடித்து விடலாம், என்பது பகல் கனவு.கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, ஆர்.எஸ்.பாரதியின் குற்றச்சாட்டுக்கு, 1 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு, சென்னை நீதிமன்றம் வாயிலாக நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு, அவர் இதுவரை பதிலளிக்கவில்லை. அதனால், வரும் 11ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நானே ஆஜராகி வாதாடப் போகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை