தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, இம்மாதம், 1ம் தேதி பொது தேர்வு துவங்கி, 22ம் தேதி நிறைவு பெற்றது. இதில், 7.68 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த விடைத்தாள்களை, வரும், 1ம் தேதி முதல் மதிப்பீடு செய்ய, ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், 9,750 கோடியில், மின் வாரியம் தலா, 660 மெகா வாட் திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைத்து வருகிறது. இதன் கட்டுமான பணிகள், 2017 டிசம்பரில் துவங்கிய பணிகள் இன்னும் முடியவில்லை; 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இந்நிலையில், இந்த மின் நிலையத்தில் முதல் அலகில், வரும் டிசம்பரில் மின் உற்பத்தி துவக்கும் என்ற தகவலை, மின் வாரியம், மத்திய மின் துறைக்கு தெரிவித்துள்ளது.தமிழக அரசு துறைகளில், குரூப் - 2 பதவிகளில், 5,413 காலிஇடங்களை நிரப்ப, 2022 மே மாதம் நடந்த முதல்நிலை தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, கடந்த ஆண்டு பிப்.,25ல் பிரதான தேர்வு நடந்தது. தரவரிசையில் முன்னிலை பெற்றவர்களுக்கு, நேர்முக தேர்வு அடங்கிய, 161 பதவிகளுக்கு, 3ம் கட்ட நேர்முக தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்த உள்ளது. இதற்கு தேர்வானவர்களின் விபரம், டி.என்.பி.எஸ்.சி., இணைய தளத்தில் நேற்று வெளியானது. மேலும் விபரங்களை, www.tnpsc.gov.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.