| ADDED : ஜூலை 02, 2024 03:24 AM
மாநில கல்வி கொள்கையில் மேலும் கூறியிருப்பதாவது:
தரமான உயர்கல்வியை அமல்படுத்தும் வகையில், மாநில உயர்கல்வி திட்டத்தை துவக்க வேண்டும்.பிளஸ் 1, பிளஸ் 2 என, இரு பொதுத் தேர்வு மதிப்பெண்களையும், உயர்கல்வி சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கூடாதுகல்லுாரிகளில் மூன்றாண்டு இளநிலை படிப்பு; இரண்டு ஆண்டு முதுநிலை படிப்பு தொடர்வதுடன், ஆராய்ச்சியுடன் கூடிய நான்கு ஆண்டு படிப்பையும் கொண்டு வரலாம். மாணவர்களை பெரிதும் பாதிக்கும், எப்போதும் சேரலாம்; எப்போதும் வெளியேறலாம் என்ற திட்டத்தை அமல்படுத்தக்கூடாதுமாணவர்களின் இடைநிற்றலை அனுமதிக்கக்கூடாது. கலை மற்றும் சமூக படிப்புகளுக்கான பாடத்திட்டங்களை, மாணவர்களின் சிந்தனையை துாண்டுதல், பகுப்பாய்வு அடிப்படையில் மாற்ற வேண்டும். அறிவியல் பாடத்திட்டங்களையும் மேம்படுத்த வேண்டும்திறந்த புத்தகம் மற்றும் திறந்த குறிப்புகள் முறை தேர்வை விரிவுபடுத்த வேண்டும். தொழில்நுட்ப வசதிகளை உயர்கல்விக்கு பயன்படுத்த வேண்டும்'டான்ஸ்கி' எனப்படும் உயர்கல்வி மன்றத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த வேண்டும். தமிழக தனியார் பல்கலைகள் சட்டத்தை திருத்த வேண்டும். வெளிநாட்டு பல்கலைகளை எந்த வகையிலும் அனுமதிக்க வேண்டாம்.கலை, அறிவியல், இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், கட்டடவியல் என, அனைத்து வகை பாடப்பிரிவுகளையும் நடத்தும் பல்கலைகள், கல்லுாரிகள், ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும். திறந்தநிலை பல்கலையுடன், மற்ற பல்கலைகள் இணைந்து செயல்பட வேண்டும் அண்ணா பல்கலையானது தனியான தொழில்நுட்ப பல்கலையாக வேண்டும். கல்லுாரிகளுக்கு இணைப்பு வழங்குவது தனியாக இயங்க வேண்டும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, சீர்மிகு ஆராய்ச்சி கல்வி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட வேண்டும். இந்த பல்கலைக்கு தனியாக சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை மற்றும் கல்லுாரி இருக்க வேண்டும் ஆயுஷ் மருத்துவப் பிரிவுகளை, அனைத்து மருத்துவமனைகளிலும் துவங்க வேண்டும்தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் கால மாற்றத்துக்கு ஏற்ற வகையில், சட்டப் படிப்புகளில் மாற்றம் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.