உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர்ப்பு

நீக்கப்பட்ட மாஜி அமைச்சர் அ.தி.மு.க.,வில் மீண்டும் சேர்ப்பு

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நிலோபர் கபில் வெற்றி பெற்று, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.கடந்த சட்டசபை தேர்தலில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில், அவரது உதவியாளர் பிரகாசம், '2021ல் நிலோபர் கபில் அமைச்சராக இருந்த போது, அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்தார்' என்ற குற்றச்சாட்டை கூறினார். அடுத்த சில நாட்களில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலோபர் கபில், முன்னாள் அமைச்சர் வீரமணி மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அரசியலில் இருந்து ஒதுங்கினார். கடந்த 10 நாட்களுக்கு முன், இ.பி.எஸ்.,சை அவர் சந்தித்து பேசினார்.இதையடுத்து, இரு நாட்களுக்கு முன், முன்னாள் அமைச்சர் வீரமணி முன்னிலையில், நிலோபர் கபில் மீண்டும் கட்சியில் இணைந்தார். இதன் வாயிலாக, முஸ்லிம்களின் ஓட்டுகளை பெற முடியும் என அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை