உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கு தள்ளி வைப்பு

சி.பி.ஐ., விசாரணை கோரிய வழக்கு தள்ளி வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுக்களின் விசாரணையை, ஜூலை 3க்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நடந்த விஷச்சாராய பலி தொடர்பான சம்பவத்தை, சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை, மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கள்ளக்குறிச்சி, மரக்காணம் விஷச்சாராய பலி தொடர்பான சம்பவங்களில், அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, பா.ம.க., செய்தித் தொடர்பாளரும், வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை தலைவருமான கே.பாலு, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி மனு தாக்கல் செய்தார். இம்மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''அறிக்கை தயாராக உள்ளது; அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார். 'புலன் விசாரணையை உரிய நேரத்தில் துவங்காவிட்டால், விசாரணையில் பாதிப்பு ஏற்படும்; உடனடியாக புலன் விசாரணையை துவங்க வேண்டும்,'' என, பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா தெரிவித்தார். இன்பதுரை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ''ஒவ்வொரு ஆண்டும் விஷச்சாராய சாவு நடக்கிறது. தாமதமான விசாரணையால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். அதனால், விசாரணையை விரைந்து நடத்த வேண்டும்,'' என்றார்.அதற்கு அட்வகேட் ஜெனரல், 'கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்றார். இதையடுத்து, அரசு தரப்பில் கோரியதை ஏற்ற முதல் பெஞ்ச், விசாரணையை, ஜூலை 3க்கு தள்ளி வைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

kalyan
ஜூன் 27, 2024 19:09

ஆளுங்கட்சியினர் தடயங்களை அழிக்க அவகாசம் கொடுக்க வேண்டாமா ? அதற்குள்... C.B.I வந்துவிட்டால் உண்மை வெளியில் வந்து விடலாம் அல்லவா ? அதற்குத்தான் இந்த வழக்கு தள்ளி வைப்பு நாடகம்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 27, 2024 10:46

நீதி பாதி நிச்சயம் விடியலைக் காப்பாற்றுவார்கள் .....


duruvasar
ஜூன் 27, 2024 09:38

அறிக்கை தயாராக இருக்கிறது .ஆனால் அதை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டுமாம். என்ன வகையான வாதம் இது. நீதிமன்றமும் அதை ஏற்று கால அவகாசம் கொடுக்குமாம். விளங்கிடும்.


தத்வமசி
ஜூன் 27, 2024 09:37

நீதிபதிகளின் மனதில் பட்டால் மாத்திரமே சிபிஐ விசாரணை சாத்தியம். கள்ளக்குறிச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் என்பது நீக்கமற நிறைந்துள்ளதாக ஏற்கனவே பல தகவல்கள் உள்ளன. அவை அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன. ஏன் சிபிஐ விசாரணை கூடாது ? யாரை காப்பாற்ற இந்த முயற்சி ?


ஆரூர் ரங்
ஜூன் 27, 2024 09:23

சிபிஐ மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவாக முடிக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் பல மாநிலக் கட்சி ஆளும் மாநிலங்கள் IPS அலுவலர்களை சிபிஐ அயல் பணிக்கு அனுப்பாமல் முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதனால் சிபிஐ யில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டு ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.


Karuthu kirukkan
ஜூன் 27, 2024 09:13

கக்கக்க ..போ.. ஜூலை 3 பஞ்சாயத்து முடுஞ்சு போச்சு ..எல்லாம் போ ..போ..


VENKATASUBRAMANIAN
ஜூன் 27, 2024 08:35

நமது நாட்டில் முதலில் சரி செய்யப்பட வேண்டியது நீதித்துறை.


மோகனசுந்தரம்
ஜூன் 27, 2024 08:33

தமிழக நீதிமன்றங்களை வர்ணிக்க வேண்டும் என்றால் ஒரே வார்த்தையில்......


Murugesan
ஜூன் 27, 2024 07:53

சென்னை நீதிமன்றம் தமிழகத்தின் சாபக்கேடு, திமுகவின் பொய்களுக்கு ஆதரவாக இருக்கின்றன, தீய சக்தி அரசியல்வாதிங்களின் வழக்கென்றால் உடனடியாக விசாரிப்பார்கள் கள்ளக்குறிச்சி சாவுக்கு முதல் குற்றவாளிகள் திமுக முதல் குடும்பமே


Duruvesan
ஜூன் 27, 2024 07:48

ஆக கேஸ் புஸ்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை