உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடற்பயிற்சிக்கு சென்று திரும்பிய டாக்டர் மயங்கி விழுந்து பலி

உடற்பயிற்சிக்கு சென்று திரும்பிய டாக்டர் மயங்கி விழுந்து பலி

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உடற்பயிற்சிக்கு சென்று திரும்பிய டாக்டர் வசந்த கிருஷ்ணன் 32, மயங்கி விழுந்து பலியானார்.ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் எஸ்.ஐ., யாக பணிபுரிபவர் பால்பாண்டி. இவரது மகன் பெரியார்நகரை சேர்ந்த டாக்டர் வசந்த கிருஷ்ணன். இவருக்கு ஒரு வருடத்திற்கு முன் திருமணமாகி மனைவி டாக்டர் சிவலட்சுமி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்.ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வசந்தகிருஷ்ணன் பணிபுரிந்தார்.நேற்று காலை வழக்கமாக உடற்பயிற்சி செய்வதற்காக அவர் ஜிம்மிற்கு சென்றார். பின் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பியவர் மனைவியிடம் மயக்கமாக வருவதாக தெரிவித்த நிலையில் மயங்கி கீழே விழுந்தார்.ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு வசந்தகிருஷ்ணனை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை