உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 3 ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளை ரூ.4,730 கோடி!

3 ஆண்டுகளில் நடந்த மணல் கொள்ளை ரூ.4,730 கோடி!

சென்னை, ஜூன் 28- தமிழக குவாரிகளில் மணல் அள்ளியதில், மூன்றே ஆண்டுகளில் 4,730 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக டி.ஜி.பி.,யிடம் மத்திய அரசின் அமலாக்கத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.தமிழக அரசு பொதுப்பணி துறையில் இருந்து, நீர்வளம் தனியாக பிரிக்கப்பட்டு, அந்த துறையின் அமைச்சராக துரைமுருகன் பணி செய்கிறார். ஆற்று மணல் அள்ளி விற்க குவாரிகள் உருவாக்கி நடத்த அனுமதி அளிப்பது நீர்வள துறை தான். அதற்கான ஒப்பந்த பணிகளை, புதுக்கோட்டை முத்துப்பட்டினத்தைச் சேர்ந்த, எஸ்.ஆர்., என அழைக்கப்படும் எஸ்.ராமச்சந்திரன் கவனித்து வந்தார்.

விதிகள் மீறல்

அவரது உறவினரும், திண்டுக்கல் தொழில் அதிபருமான ரத்தினம், புதுக்கோட்டை கரிகாலன் ஆகியோர், குவாரிகளில் இருந்து மணல் எடுத்து யார்டுக்கு கொண்டு சென்று, அங்கிருந்து மாநிலம் முழுதும் வினியோகிக்கும் அரசு ஒப்பந்ததாராக செயல்பட்டு வந்தனர். கரிகாலன், கல் குவாரிகளில் கிராவல் அள்ளி விற்கும் தொழிலும் செய்து வந்தார்.இந்த மூவருக்கும் அதிகார மையங்களுடன் நேரடி தொடர்பு இருந்ததால், மணல் எடுப்பது, விற்பது போன்ற விஷயங்களில் விதிகளை மீறினாலும், அரசு அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என நீண்டகாலமாக புகார்கள் கூறப்பட்டன. இதனால், ஒவ்வொரு குவாரியிலும் அரசு நிர்ணயித்த அளவை காட்டிலும் பல மடங்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டு விற்கப்பட்டது.

சட்ட விரோத மணல் கொள்ளையின் தொடர்ச்சியாக கோடி கோடியாக பணம் கைமாறியதும் தெரியவந்ததால், மத்திய அரசின் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனர். ஆறு மாவட்டங்களில் மணல் குவாரிகளிலும், ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோரின் வீடு, அலுவலகம், கல்லுாரிகளிலுமாக 34 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நீர்வள துறை அலுவலகத்திலும் பல ஆவணங்களை எடுத்தனர்.

கண்டுபிடித்தனர்

'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் உதவியுடன், குவாரிகளில் 'டிஜிட்டல்' கருவிகள் வாயிலாக ஆய்வு செய்தபோது, ஒவ்வொரு நாளும் எவ்வளவு மணல் குறைந்து கொண்டே வந்தது என்பது செயற்கைக்கோள் படங்களில் துல்லியமாக வெளிப்பட்டது. இதன் வழியாக கொள்ளை அடிக்கப்பட்ட மணல் எத்தனை டன் என்பதை கண்டுபிடித்தனர்.கான்பூர் ஐ.ஐ.டி., நிபுணர்கள் உதவியுடன் அதே குவாரிகளில் ஆய்வு நடத்தி, மணலுக்கு அரசு நிர்ணயம் செய்த விலை அடிப்படையில் கணக்கிட்டபோது, அமலாக்க துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விதிகளின்படி எடுத்த மணல், விற்ற மணல், வசூலித்த தொகை எல்லாம் தவிர்த்து, எந்த கணக்கிலும் வராத தொகை மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய் என்பது தான் அவர்களை அதிரவைத்த தகவல். ஒன்பது மாதங்கள் நடத்திய தொடர் விசாரணையில், மணல் கொள்ளையர்கள் சுருட்டிய தொகை 4,730 கோடி ரூபாய் என்று அமலாக்க துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் ஆகியோருக்கு சொந்தமான, 130 கோடி ரூபாய் சொத்துக்களும் 35 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. 128.34 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ராட்சத மணல் அள்ளும் இயந்திரங்களை பறிமுதல் செய்தனர். நீர்வளத் துறை முதன்மை தலைமை பொறியாளர் முத்தையாவிடம் இரண்டு நாட்கள் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில், மணல் கொள்ளையை தடுக்க தவறிய, 10 மாவட்ட கலெக்டர்களுக்கு, 'சம்மன்' அனுப்பினர். திருச்சி, கரூர், தஞ்சாவூர், வேலுார், அரியலுார் மாவட்ட கலெக்டர்களை தனித்தனியாக இரண்டு மணி நேரம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர். கலெக்டர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஏறத்தாழ ஓராண்டாக புலனாய்வில் திரட்டிய தகவல்களை தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜிவாலுக்கு அமலாக்க துறை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது. அதில் இடம் பெற்றுள்ள புள்ளிவிவரங்கள் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:ராமச்சந்திரன், ரத்தினம், கரிகாலன் 28 குவாரிகளில் மணல் அள்ள, நீர்வள துறையிடம் அனுமதி பெற்றுள்ளனர். ஒப்பந்தப்படி, 490 ஏக்கரில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், 2,450 ஏக்கருக்கு மேல் மணல் அள்ளினர்.நீர்வள துறையின் பதிவேட்டில், 4.05 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டதாக பதிவாகி உள்ளது. பொறியாளர்களும் இதையே வாக்குமூலமாக தெரிவித்தனர். ஆனால், 'இஸ்ரோ' விஞ்ஞானிகள், கான்பூர் ஐ.ஐ.டி., நிபுணர்கள் நடத்திய அறியல் பூர்வமான ஆய்வில், 27.70 லட்சம் யூனிட் மணல் அள்ளப்பட்டது உறுதியானது. அதாவது, 24 லட்சம் யூனிட்டிற்கு மேல் மணல் கொள்ளை நடந்துள்ளது.மணல் விற்றதால் அரசுக்கு கிடைத்த வருவாய் 36.45 கோடி; ஆனால், கணக்கில் வராமல் சுருட்டிய தொகை 4,730 கோடி ரூபாய். நீர்வள துறை அதிகாரிகள், துறையின் முக்கிய புள்ளிகள் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.மணல் கொள்ளை தொடர்பாக, தமிழகத்தில் உள்ள, பல காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகியும், காவல் துறையினர் மெத்தனமாக செயல்பட்டுள்ளனர். இதுபற்றி, டி.ஜி.பி.,க்கு சுட்டிக்காட்டி உள்ளோம்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 56 )

UTHAMAN
ஜூன் 28, 2024 22:45

மணல் கொள்ளை மாநில அதிகாரத்தில் வருகிறது. அளவுக்கு அதிகமான வரி ஏய்ப்பு அமலாக்கத்துறை அதிகாரத்தில் வருகிறது. எனவே மாநில அரசுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த பின்னர் நீதிமன்ற உத்திரவை பெற்று அமலாக்கத்துறை துரைமுருகனை கைது செய்வர். அதன்பின்னர் நீங்கள் ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என கூவலாம்.


M Ramachandran
ஜூன் 28, 2024 20:11

1970 கலீல் தற்போசத்யா ECR ரோடில் பாலாறு ஏமாற்று பிற்காலத்திய அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். அப்போது ஆறு முழுக்கா மணலாகா இருந்தது. கல்பாக்கம் நகரியத்திலிருந்து ஞ்யாயிற்று கிழமைய்யகளில் அங்கு வேலை செய்யும் வங்காளிகள் குடும்பத்துடன் அந்த மீன் பிடிப்பார்கள். அலகு தண்ணீரும் சுவைய்யாக்கா இருக்கும். பாலாறு தண்ணீர் மிக்கா சுவையாக இருக்கும். நகரியத்திற்கு அங்கு பாலாற்றின் பண்காட்டு சேரியிலிருந்து பைப் லைன் வழியாகா தண்ணீர் எடுத்து கொண்டிருந்தார்கள். இப்போது அங்கு ஆற்றில் மணலையென பார்க்க முடியாது வெட்டி முழுக்க எடுத்து விட்டதால் கடல் நீர் புகுந்து முழுக்கா உபயோஅகமற்றா நீராக ஆகி இட்டது. இந்த அளவிற்கு நம் முனேற்றம். அப்போதய கர்நாடக அமைச்சர் இந்த பாலாற்றை அதன் அருமையாய் அவர் உணர்ந்திருந்தார். அதாவது 200 அடிக்கீழ் எப்போதும் நீர் ஓட்டம் இருக்கும் மென்றும் அதைய உபயோக படுத்தினால் நம் தமிழ் நாட்டின் பெரும் தேவையாய் பூர்த்தி செய்யும் என்று கூறினார். அதை தேவை என்பதை தான் நம் அரசியல் வாதிகள் வேரூ விதமாகா அர்த்தம் செய்து கொண்டு விட்டார்கள்.


MADHAVA NANDAN
ஜூன் 28, 2024 20:07

தமிழக டிஜிபி சரியாக இருந்திருந்தால் தான் சாராய கொலைகள் நடக்காதே மேலும் போலீசே கஞ்சா வியாபாரம் செய்யமாட்டாங்களே .... எத்தனைகாலம் தான் ஏமாறுவோம் இந்த நாட்டிலே? 3 ஆண்டுகளில் சுமார் 5000 கோடி ஒரு துறையில் அப்போ அணைத்து துறைகளிலும் சேர்த்தால் 50 ஆண்டுகளில் ? இது அனைத்தும் திரும்ப வசூலிக்கப்பட்டு அதற்கான ஆதாரம் எமக்கு நிச்சயம் வேண்டும் இதை செய்கிற ஆண்மகன் என் நாட்டில் பிறந்துவிட்டானா ???


SVK SIMHAN
ஜூன் 28, 2024 20:03

விசாரணை, தேடல், வாக்கு மூலம், புகார் மனு எல்லாம் ஒழுங்கு. தமிழகத்தில் தமிழக அரசுக்கு எதிராக துறை அதிகாரிகள் கண்ணியத்துடன் செயல்படுவார்கள் என மக்களை நம்ப சொல்கிறீர்கள். தமிழகத்தில் தவறுகள் தவிர்க்க முடியாத வாழ்க்கையாகி போனது தான் திராவிடர்கள் ஆட்சி புரிகின்ற அவலம்.


Sree
ஜூன் 28, 2024 19:39

அம்பல படுத்தி என்ன கிழிக்க போறீங்க


M Ramachandran
ஜூன் 28, 2024 19:33

கண்டு பிடித்து என்ன பயன் நீதிமன்றங்கள் விடுவித்து விடுகிறதெ


r ganesan
ஜூன் 28, 2024 18:00

திட்டம் ஒட்டு திருடற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். அதை சட்டம் போட்டு தடுக்கற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்கும் .


krishna
ஜூன் 28, 2024 17:46

5 COLLECTORS SUMMONED BY ED.THUDU SEATTU FILED CASE TO ANNUL THE SUMMON.SHEER NONSENSE.COURT REFUSED THEY APPEARED BEFIRE.THIS IS TOTAL PROOF FOR KATTUMARAM FAMILY INVOLVEMENT.MODI IS VERY SOFT.BY THIS TIME DRAVIDA MODEL LOOTERS SHOULD HAVE BEEN IN JAIL.


krishna
ஜூன் 28, 2024 17:46

5 COLLECTORS SUMMONED BY ED.THUDU SEATTU FILED CASE TO ANNUL THE SUMMON.SHEER NONSENSE.COURT REFUSED THEY APPEARED BEFIRE.THIS IS TOTAL PROOF FOR KATTUMARAM FAMILY INVOLVEMENT.MODI IS VERY SOFT.BY THIS TIME DRAVIDA MODEL LOOTERS SHOULD HAVE BEEN IN JAIL.


venugopal s
ஜூன் 28, 2024 17:31

எல்லா சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தால் அமலாக்கத்துறையே நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே, அது ஏன் மாநில டி ஜி பி யிடம் அறிக்கை கொடுக்க வேண்டும் என்று புரியவில்லை!


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி