உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூர் கோவிலில் விடைபெற்றது 257 ஆண்டு பழமையான தேர்

ஓசூர் கோவிலில் விடைபெற்றது 257 ஆண்டு பழமையான தேர்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டத்தின் போது, மரகதாம்பிகை அம்மனுக்கு தனி தேர் இழுக்கப்படும். இதற்காக, 1767ல் கட்டப்பட்ட தேரை, கோவில் நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. இந்த தேர், 257 ஆண்டுகளை கடந்து, சேதமான நிலையில் இருந்தது. எனவே, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், ஊர் மக்கள் சார்பில் 14 அடி உயரம், 28 டன் எடையில் புதிய தேர் செய்யப்பட்டது.அந்த தேர் மார்ச், 25ல் நடக்கும் தேரோட்டத்தில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன், நாளை தேர் வெள்ளோட்டம் நடக்க உள்ளது.இந்நிலையில், 257 ஆண்டுகள் பழமையான தேருக்கு நேற்று, வாச்சீஸ்வர குருக்கள் சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து, தேர் கமிட்டி தலைவர் மனோகரன், மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் பலர் பழைய தேரை நகர்த்தி சென்று, தேர்ப்பேட்டை பகுதியில் நிறுத்தினர்.அழகிய மரச் சிற்பங்களை உடைய இந்த தேரை அப்படியே விட்டு, பாழாக்கி விடாமல், மலை மீது எடுத்துச் சென்று பாதுகாத்து, வரும் தலைமுறை அறிந்து கொள்ளும் வகையில் பராமரிக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி