மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
2 hour(s) ago | 3
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
5 hour(s) ago | 33
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
7 hour(s) ago | 14
சென்னை:'உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி செயல்படும் கர்நாடக அரசைக் கண்டித்து, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.அவரது அறிக்கை:காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், அணை கட்டும் பணி துவங்கப்படும் என்று, கர்நாடக சட்டசபையில், அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தடையை மீறி, மேகதாது அணை கட்டுவதற்கான முன்னேற்பாடுகளை, கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது. இதற்குப் பிறகும் கர்நாடகாவின் அத்துமீறல்களை, தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கை பார்க்கக்கூடாது.சென்னை மாகாணம் -- மைசூர் சமஸ்தானம் இடையே, 1924ல் கையெழுத்தான காவிரிநீர் பகிர்வு ஒப்பந்தத்தின்படி, கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே அம்மாநில அரசு அணைகள் கட்ட முடியாது; உச்ச நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழகத்தின் அனுமதி இல்லாமல், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு துடிப்பதும், அதற்கு மத்திய நீர்வள அமைப்புகள் துணை போவதும், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானவை. கர்நாடக அரசைக் கண்டித்து, நடப்பு தமிழக சட்டசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2 hour(s) ago | 3
5 hour(s) ago | 33
7 hour(s) ago | 14