உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சாவிலும் பிரியாத சகோதரர்கள்

சாவிலும் பிரியாத சகோதரர்கள்

திருச்சுழி : விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பசுமடத்து தெரு ஓய்வு வி.ஏ.ஓ., வாசகன் 80. இவரது தம்பி முருகேசன் 61. சிறு வயது முதலே இருவரும் இணை பிரியாமல் இருந்துள்ளனர். குடும்ப விசேஷங்களுக்கு ஒன்றாகவே சென்று வருவர். உடல்நிலை பாதிக்கப்பட்ட வாசகன் நேற்றுமுன்தினம் அதிகாலை இறந்தார்.இந்த தகவல் திருச்சுழியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த முருகேசனிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இருவரும் ஒன்றாகவே இருந்து சாவிலும் ஒன்றாகவே இணைந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை