உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொங்கல் வரை ஸ்டிரைக் நீடித்தாலும் பஸ்கள் ஓடும்

பொங்கல் வரை ஸ்டிரைக் நீடித்தாலும் பஸ்கள் ஓடும்

விழுப்புரம் பஸ் நிலையத்தில், அரசு பஸ்கள் இயக்கம் குறித்த நேற்று மாலை ஆய்வு செய்த, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது: போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பொங்கல் வரை நீடித்தாலும், மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில், பஸ்களை இயக்க ஏற்பாடு செய்துள்ளோம். பொங்கலையொட்டி, சென்னை மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல இடையூறின்றி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.போக்குவரத்து தொழிற் சங்கங்களுடன் நடத்திய பேச்சு தோல்வி அல்ல. அது, இருதரப்பும் பேசி சுமூக முடிவு வர வேண்டும். தொழிற் சங்கங்கள் ஆறு கோரிக்கைகளை தெரிவித்திருந்தன; அதில், நான்கு கோரிக்கை நிறைவேறியிருக்கிறது. பிற கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதற்கு அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். தற்போது அரசின் நிதிநிலையில், செய்வது சிரமம் என்பதால், இப்போது செய்ய இயலாது என்பதை தெரிவித்தோம். அதை புரிந்து கொள்ளாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கிஉள்ளனர்.போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று கூறவில்லை. நிதி நிலைமை சீரானதற்குப் பின் நிறைவேற்றித் தரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை