மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆரால் ஓட்டு குறையாது: கார்த்தி எம்.பி., கருத்து
5 minutes ago
நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி: பாதிக்கப்பட்டோர் வேண்டுதல்
8 minutes ago
சிவகங்கை: மானாமதுரையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கறிக்கடை ஊழியர் கார்த்திக்கிற்கு 30 ஆண்டு சிறை, ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மாரியம்மன் கோயில் தெரு ராமமூர்த்தி மகன் கார்த்திக் 24. இவர் ரயில்வே கேட் அருகே கறிக்கடையில் வேலை செய்தார். 2020 ஆக.,4ல் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். அச்சிறுமி பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்களது புகாரின்பேரில் மானாமதுரை சிப்காட் போலீசார் கார்த்திக்கை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன் முன் விசாரணைக்கு வந்தது. கார்த்திக்கிற்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
5 minutes ago
8 minutes ago