மேலும் செய்திகள்
ஓட்டுப்பதிவு மிஷின்களில் முதல்கட்ட சோதனை
3 hour(s) ago
37 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
3 hour(s) ago
மருத்துவ மாணவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
3 hour(s) ago
தமிழகத்தில், 234 தொகுதிகளில் எடுக்கப்பட்ட மத்திய உளவுத்துறை சர்வேயில், தி.மு.க., கூட்டணிக்கு 90; அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு 35; த.வெ.க.,வுக்கு 70 தொகுதிகள் கிடைக்கலாம் என, கூறப்பட்டுள்ளது. கடந்த செப்., 27ல், கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பின், தமிழகத்தில் த.வெ.க.,வுக்கு உள்ள செல்வாக்கு குறித்து, மத்திய உளவுத்துறை தரப்பில், இரண்டு கட்டமாக, 'சர்வே' எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்பு:
அதில் கூறப்பட்டுள்ளதாவது: தி.மு.க., கூட்டணி, 90 தொகுதிகளில் முதலிடம் வகிக்கிறது. 70 தொகுதிகளில், த.வெ.க., முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது இடத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு, 35 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. நாம் தமிழர் கட்சிக்கு, ஒரு தொகுதியும், மீதமுள்ள 38 தொகுதிகளில் இழுபறியும் இருக்கிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார், தர்மபுரி ஆகிய எட்டு மாவட்டங்களில், வன்னியர் மற்றும் பட்டியலினத்தவர் அடர்த்தியாக வசிக்கும் 40 சட்டசபை தொகுதிகளில், த.வெ.க., முன்னிலை வகிக்கிறது. சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை ஆகிய ஐந்து முதல்நிலை மாநகராட்சிகளில் உள்ள சட்டசபை தொகுதிகளி லும் , மொழி சிறுபான்மையினர் மற்றும் அருந்ததியர், பட்டியலினத்தவர் அதிகமாக இருக்கும் 15 தொகுதிகளிலும் த.வெ.க., முன்னிலை வகிக்கிறது. தென் மண்டலத்தில், தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனுார், துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் த.வெ.க.,வுக்கு குறிப்பிடத்தக்க அளவில் ஓட்டுகள் கிடைக்கலாம். கொங்கு மண்டலத்தில் கரூர், கோவை மாவட்டங்களில், ஐந்து தொகுதிகளில், அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பே உள்ளது. திருப்பூர், நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், மற்ற கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி தி.மு.க., முன்னணியில் இருக்கிறது; அங்கெல்லாம், த.வெ.க.,வுக்கு இழுபறி நிலையே காணப்படுகிறது. சாதகமான சூழல்:
தென் மாவட்டங்களில் நாடார், தேவேந்திர குல வேளாளர் அதிகமாக உள்ள தொகுதிகளில், அடையாளப்படுத்தக்கூடிய அளவுக்கு த.வெ.க.,வுக்கு ஒட்டுகள் இல்லை. அதேசமயம், முக்குலத்தோர் மற்றும் நாயுடு சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் சட்டசபை தொகுதிகளில் த.வெ.க.,வுக்கு சாதகமான சூழல் காணப்படுகிறது. கிறிஸ்துவர்கள், மீனவர்கள் அதிகமாக வசிக்கும் கடலோர மாவட்டங்களில் குளச்சல், கிள்ளியூர், நாகப்பட்டினம், வேதராண்யம், துாத்துக்குடி போன்ற தொகுதிகளும், த.வெ.க.,வுக்கு சாதகமாகவே உள்ளன. வட மாவட்டங்களில் த.வெ.க., அலை வீசுகிறது. இந்த சர்வே அடிப்படையில், தமிழகத்தில் அடுத்து தொங்கு சட்டசபை அமையவே அதிக வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தன் வீட்டில், தி.மு.க.,வின் எட்டு மண்டல பொறுப்பாளர்களுடன், நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தினார். அதில், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம், திருவண்ணாமலையில் வரும் 14ல் நடக்கும் இளைஞரணி மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சர்கள் - அதிகாரிகள் இடையே இருக்கும் பிரச்னைகளை தீர்ப்பது குறித்தும் முக்கியமாக பேசப்பட்டுள்ளது. ஆளும் கட்சிக்கு ஆதரவாக, 'சர்வே' எடுக்கும் 'பென்' நிறுவனத்தின் நிர்வாகிகளும் தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும் நிர்வாகிகளும், இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். முதல்வரிடம் அவர்கள், எந்தெந்த தொகுதிகளில் கட்சிக்கு பின்னடைவு என்பதை, வரைபடத்துடன் விளக்கிக் கூறியதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - நமது நிருபர் -
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago