மேலும் செய்திகள்
பதிவுத்துறையில் டிச., 15ல் கூடுதல் டோக்கன்
1 hour(s) ago
தகவல் ஆணையரை தரக்குறைவாக பேசிய நபருக்கு கண்டிப்பு
1 hour(s) ago
ஒரு பெட் வளர்த்தா கிடைக்கற அனுபவம் வேற லெவல். வீட்டுல ஒருத்தரா மாறிடுற பெட்ஸ்சோட ஊர் சுற்றுவது, ஷாப்பிங் செய்வது தாண்டி, குரூமிங் செய்வது, ஷோக்களுக்கு அழைச்சிட்டு போறது தான் டிரெண்டாகுது. அங்க, நிறைய பெட் பேரன்ட்ஸ் மீட் பண்றதோட, மத்த பிரீட் பத்தி, தன்னோட செல்லத்துக்கு இருக்கற டேலண்டையும் எக்ஸ்போஸ் பண்றாங்க. 'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்' சமீபத்துல கோவை அவிநாசிரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில, டாக் ஷோ நடத்துனாங்க. 250க்கும் மேற்பட்ட டாக்ஸ் இந்த ஷோக்கு வந்துச்சு. இதுல, க்யூட்டா போஸ் கொடுத்த பப்பிஸ் இதோ:ஜாக்கிரதை... நமக்கும் பரவும்!
நாய்களை வீட்டுச்சூழலில் வளர்க்கும் போது தவறான உணவுப்பழக்கம், சுற்றச்சூழல் பாதிப்புகளால் தோல் நோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உணவுமுறைகளை பொறுத்தவரை, மனிதர்கள் சாப்பிடும் உப்பு, சர்க்கரை, காரம், பதப்படுத்தப்பட்ட உணவுகளை நாய்க்கு கொடுக்கக்கூடாது. அவை தங்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். குப்பைகளில் இருந்து தான் உண்ணிகள் உருவாகும்.
'சலோ மாயா!'ங்கற குரல் கேட்டதும் படுத்திருந்த குதிரை, விர்ரென எழுந்து தேகம் சிலிர்க்க ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வந்து நிற்க, சினிமா ஹீரோ ஸ்டைலில் தாவியேறி அதன் முதுகில் அமர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார் ஜீவிகா.கோவை, சத்தியமங்கலம் ரோடு பகுதியைச் சேர்ந்த இவர், ஐ.டி., நிறுவன ஊழியர். ஒய்யாரமாய்ஒரு சவாரி செய்துவிட்டு, அசால்ட்டாய் எட்டி குதித்து கீழே இறங்கிய அவர் கூறியதாவது:என் தாத்தா, அப்பா எல்லாருமே குதிரை வளர்த்துருக்காங்க. எனக்கும் குதிரை வளர்ப்பில் ஆர்வம். ஆறாவது படிக்கும் போது, அப்பா லோகநாதன் தான் குதிரையில ரைடு போறதுக்கு சொல்லிக்கொடுத்தார்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், மலர் கண்காட்சி நடக்கிறது. இதன் ஒருபகுதியாக, 24,25ம் தேதிகளில், செல்லப்பிராணிகள் அணிவகுப்பு, காலை 9:00-11:00 மணி மற்றும் மாலை 4:00-6:30 மணி வரை நடப்பதால், மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
1 hour(s) ago
1 hour(s) ago