உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்

போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசு: இபிஎஸ் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை: சென்னை விமான நிலையத்தில் ரூ.22 கோடி மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்.டி.எம்.ஏ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. விடியா திமுக ஆட்சியில் அதிகரிக்கும் போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ச்சியாக நான் எச்சரித்து வந்தும், இந்த அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, திமுக அயலக அணி நிர்வாகியாக இருந்த ஒருவர், சர்வதேச போதைப்பொருள் மாபியாவாக இருந்த செய்தியே வந்து சேர்ந்தது. தற்போது, சிந்தெடிக் போதைப்பொருட்களை கடத்துபவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமிழகத்தை போதை பொருள் மையமாக மாற்றி இருப்பதற்கு இந்த அரசே காரணியாக உள்ளது. சிந்தெடிக் போதைப்பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றிய விடியா திமுக அரசுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதுடன், இனியாவது போதைப்பொருள் தடுப்பில் விழிப்புடன் துரிதமாக செயல்படுமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Ramesh Sargam
மே 17, 2024 20:16

திமுக ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் போதைப்பொருட்கள் விநியோகிக்கும் headquarters ஆகிவிடும்


Santhakumar Srinivasalu
மே 17, 2024 18:27

உங்கள் ஆட்சியில் கொரானா காலத்திலேயே தாராளமாக புழங்கி அதில் உங்கள் கட்சிக் கார்கள் விளையாடியது உங்களுக்கு தெரியாதா?


பேசும் தமிழன்
மே 17, 2024 15:55

என்ன பழனி இவ்வளவு நாள் தூக்கத்தில் இருந்தாரா..... இதை பிஜெபி கட்சி அண்ணாமலை எப்போதோ சொல்லி விட்டார்..... நீங்கள் எப்போதும் போல அமைதியாக இருங்கள்... இல்லை கொடநாடு பூதம் விழித்து கொள்ளப் போகிறது


Santhakumar Srinivasalu
மே 17, 2024 18:28

சூப்பர் பதிவு


Sankar Ramu
மே 17, 2024 15:09

பங்காளி என்னா கட்டிங் வரவில்லையா?


ram
மே 17, 2024 14:40

சந்து பொந்தெல்லாம் தடையில்லாம் கஞ்சா எங்கும் விற்கப்படுது... காவல்துறை, உலவுத்துரை மற்றும் ரகசிய போலீஸ் அனைத்து துறைகளுக்கும் கடிவாலம் போட்டது யார்.. இப்படி சுதந்திரமாக விநியோகம் செய்வதற்கு முழு சுதந்திரம் கொடுத்தது யார்...?. முதல் குற்றவாளி ஆளும் அரசு.. என்னப்பா நடக்குது.... தமிழ்நாடு குட்டிச்சுவரா போகுது.. அதுமட்டும் நல்லா பிரகாசமா தெரியுது...


Narayanan
மே 17, 2024 14:15

இந்த போதை பொருள் புழக்கம் ஆளும் தரப்புக்கும், காவல் துறைக்கும் பொய்வழக்கு போடசௌகரியமாக இருக்கிறது


Narayanan
மே 17, 2024 14:11

தொடக்கத்தில் இருந்தே சிறப்பான எதிர்க்கட்சி தலைவராக செய்யப்பட்டிருக்கவேண்டும் இப்போ நீங்கள் எதை சொன்னாலும் நம்பும் படியாக இல்லை முதலில் ஊடகங்களை நடுநிலையாக செயல்பட அவர்களின் அலுவலகத்திர்க்கோ அல்லது அவர்கள் எல்லோரையும் ஒரு இடத்தில் கூட்டி அவர்களின் நிலை பாட்டை மாற்றுங்கள்


Kannan
மே 17, 2024 13:58

தொண்டர்களுக்கு தேர்தல் நேரத்தில் சப்ளை செய்து வசமாக சிக்கி கொண்ட ஜாபிர் சாதிக் மற்றும் உதயா நிதி


K.Muthuraj
மே 17, 2024 13:39

சராசரி மக்கள் எப்போதும் தூங்குபவர்கள் என்ற உண்மையை நன்றாய் உணர்ந்து கொண்டவர் எடப்பாடி


raja
மே 17, 2024 13:35

இப்படி எல்லாம் கோவால் புற திருட்டு திராவிடனுக்கு வருமானம் வந்தால் தான் பாலாறு தேனாறும் ஏமாளி தமிழன் வீட்டில் ஓடும் என்று ஏமாற்றி பிழைக்கும் கேடுகெட்ட பி கிஷோருக்கு கோடி கொடுத்து வரும் தேர்தலில் நீங்க சொல்ற விடியா மூஞ்சி ஜெயிக்க முடியும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை