உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மைக் வேண்டாம் பாய்மர படகு கொடுங்க..: சீமான் தரப்பு மீண்டும் கோரிக்கை

மைக் வேண்டாம் பாய்மர படகு கொடுங்க..: சீமான் தரப்பு மீண்டும் கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலாக படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் கமிஷனில் சீமான் முறையிட்டுள்ளார்.லோக்சபா தேர்தலில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. அவரது கட்சி முன்பு போட்டியிட்ட 'கரும்பு விவசாயி' சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், 'மைக்' சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கி இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுக விழாவில், சின்னத்தை குறிப்பிடாமல் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான். இதனால் 'மைக்' சின்னத்தை சீமான் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்பட்டது.இந்த நிலையில், மைக் சின்னத்திற்கு மாற்றாக படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்க கோரி தேர்தல் கமிஷனில் சீமான் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் கமிஷன் இன்று மாலை அல்லது நாளை முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. சின்னம் முடிவான பின்னரே பிரசாரத்தை துவங்க சீமான் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Azar Mufeen
மார் 26, 2024 11:19

ஏன் வாசனுக்கு சின்னம் கொடுத்தவர்கள் சீமானுக்கு கொடுக்கவில்லை


ஆரூர் ரங்
மார் 26, 2024 11:16

போனா போகுது. கட்டுமரம் சின்னத்தை மட்டும் கேட்காதே. ?அது ஸ்டாலின் குடும்ப காப்பிரைட்.


deepika
மார் 26, 2024 08:56

hi


ஆரூர் ரங்
மார் 26, 2024 11:16

ஆமை சின்னம் ஓகே வா?


ராமகிருஷ்ணன்
மார் 26, 2024 07:30

பாய்மர படகில் ஏறி அப்படியே சிலோன், ஆஸ்திரேலியா என்று போயிடு, சனி விட்டுச்சு என்று தமிழகம் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.


Ramaraj P
மார் 25, 2024 21:07

எந்த சின்னமா இருந்தால் என்ன ??


surya krishna
மார் 25, 2024 18:38

ஏன் நானும் மீனவன் என்று சொல்லி ஓட்டு கேட்கவா


சுலைமான்
மார் 25, 2024 18:06

வாழப்பழம் கேளுணா.... அதான்ணா உனக்கு கரெக்டா இருக்கும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை