உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பார்வர்டு பிளாக் கட்சியினர் பழனிசாமியுடன் சந்திப்பு

பார்வர்டு பிளாக் கட்சியினர் பழனிசாமியுடன் சந்திப்பு

சென்னை:அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய தலைவர் மற்றும் நிர்வாகிகள், நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சு நடத்தினர்.அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, தேசிய அளவில் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தி.மு.க., லோக்சபா தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு சீட் ஒதுக்க முன்வரவில்லை. எனவே, அக்கட்சி அ.தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய தலைவர் நரேன் சாட்டர்ஜி, பொதுச்செயலர் தேவராஜன், செயலர் சிவசங்கர், துணைத்தலைவர் கதிரவன் மற்றும் நிர்வாகிகள், நேற்று அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.அப்போது, அ.தி.மு.க., கூட்டணியில், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு, லோக்சபா தேர்தலில், ஒரு, 'சீட்' ஒதுக்கும்படிவலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை