மேலும் செய்திகள்
விவசாயிகளிடம் சூரியசக்தி மின்சாரம் வாங்க டெண்டர்
4 minutes ago
ஓசூர் விமான நிலையம் தயாராகிறது திட்ட அறிக்கை
6 minutes ago
கூடுதலாக 20 லட்சம் ஓட்டு எப்படி: நாராயணசாமி
12 minutes ago
சென்னை : தோட்டக்கலைத் துறை பண்ணை செயல்பாடுகள் முடக்கப்பட்டு, காய்கறி நாற்றுக்கள், நடவு செடிகள், 'அவுட் சோர்சிங்' செய்யப்பட்டு வருவதால், வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காக, விவசாயிகளுக்கு காய்கறி விதைகள், நடவு செடிகள், பழமரக் கன்றுகளை குறைந்த விலையில் வழங்க, 74 இடங்களில் தோட்டக்கலைத் துறை பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆதரவாளர் பல ஏக்கர் பரப்பளவில், இந்த பண்ணைகளுக்கு அரசு நிலம் வழங்கப்பட்டு உள்ளது. முந்தைய ஆட்சி காலங்களில், இங்கு ஆண்டுதோறும் இலக்கு நிர்ணயம் செய்து, நடவு செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. தற்போது, பெரும்பாலான தோட்டக்கலை பண்ணைகளில் நடவு செடிகள் உற்பத்தி செய்யப்படுவது கிடையாது. கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உள்ள வேளாண் துறையின் முக்கிய புள்ளி ஆதரவாளர் ஒருவரது பண்ணையில் இருந்து, 'அவுட்சோர்சிங்' முறையில் நடவு செடிகள் கொள்முதல் செய்யப் படுகின்றன. தென் மாவட்டங்களில், ஒரு தனியார் பண்ணையில் தயாராகும் நடவு செடிகள், அங்குள்ள தோட்டக்கலை பண்ணைகளில் விற்பனையாகின்றன. கொள்முதல் முதல்வரின் வீட்டுத் தோட்ட திட்டத்திற்கும், இந்த பண்ணைகளில் இருந்துதான் செடிகள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், தோட்டக்கலை பண்ணைகளின் செயல்பாடுகள் நான்கு ஆண்டுகளாக முடங்கிஉள்ளன. இதுகுறித்து, தோட்டக் கலைத் துறை வட்டாரத்தில் கூறப்படுவதாவது: தோட்டக்கலை பண்ணைகளில், நடவு செடிகள் விற்பனை வாயிலாகவும், பூங்காக்களுக்கு பொது மக்கள் வருகை காரணமாகவும், ஆண்டுக்கு 20 முதல் 25 கோடி ரூபாய் வருமானம் கிடைத்தது. தற்போது, பண்ணைகள் வாயிலாக வரும் வருவாய் முற்றிலும் குறைந்து உள்ளது. பூங்காக்கள் வாயிலாக, ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது. பண்ணைகளுக்கு தேவையான அதிகாரிகள், அலுவலர்கள் நியமிக்கப் படவில்லை. மூட வேண்டும் தோட்ட தொழிலாளர்களுக்கு கூலி தர வேண்டும் என்பதால், அவுட் சோர்சிங் முறை அமலில் உள்ளது. பண்ணை மற்றும் பூங்காக்கள் செயல்பாடுகளை நேரில் ஆய்வு செய்தால், முழு விபரமும் தெரியும். உயர் அதிகாரிகள் சென்னையை விட்டு நகராததால், அதை மாவட்ட அதிகாரிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், விரைவில் பண்ணைகளை இழுத்து மூட வேண்டிய நிலை உருவாகி விடும். இவ்வாறு அந்த வட்டாரத்தில் கூறப்படுகிறது.
4 minutes ago
6 minutes ago
12 minutes ago